காங்கிரஸின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: பிரதமர் மோடி

4 months ago 29


அரியானா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. முன்னதாக இன்று காலை பிரதமர் மோடி அம்மாநில மக்களுக்கு தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் என்றால் ஊழல், சாதி வெறி, வகுப்புவாதம் மற்றும் குடும்ப அரசியல் என்பது அரியானா மக்களுக்கு தெரியும். காங்கிரஸ் அரசியலின் அடிப்படை நோக்கம் சுயநலம் மட்டுமே. காங்கிரஸ் என்றால் தரகர்கள் மற்றும் மருமகன்களின் அணிசேர்க்கை என்று பொருள். இன்று இமாச்சல் முதல் கர்நாடகம் வரையிலான காங்கிரஸ் ஆட்சியின் தோல்வியை மக்கள் பார்க்கிறார்கள். காங்கிரஸின் கொள்கைகள் மக்களை அழிக்கின்றன, அதனால்தான் அரியானா மக்கள் காங்கிரஸை விரும்பவில்லை.காங்கிரஸால் ஒருபோதும் நிலையான ஆட்சியை வழங்க முடியாது என்பது அரியானா மக்களுக்கு தெரியும். இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை அளித்து தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இன்று ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவை நோக்கி உள்ளது. உலகமே இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் பார்க்கிறது. பிளவுபடுத்தும் அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள்"என்றார்.

Read Entire Article