காக்களூர் தொழிற்பேட்டை பகுதியில் சாலையோரம் குப்பை குவியல்: துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு

1 day ago 1

திருவள்ளூர்: திருவள்ளூர் – ஆவடி சாலை காக்களூர் தொழிற்பேட்டை அருகே சாலையின் இரண்டுபுறமும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வரப்படும் குப்பை கழிவுகளை கொட்டுகின்றனர். இந்த சாலையில் வேளாண்மை துறை அலுவலகம், அரசு நடுநிலைப் பள்ளி, ஆவின் பால் பண்ணை உள்ளதால் இங்கு வருகின்ற மக்கள், குப்பை குவியலில் இருந்து வரும் துர்நாற்றத்தால் கடும் அவதிப்படுகின்றனர்.

திருவள்ளூரில் இருந்து ஆவடிக்கு செல்பவர்கள், சென்னையில் இருந்து ஆவடி வழியாக திருவள்ளூர் நோக்கி வரும் மக்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் குப்பை கழிவுகளை கால்நடைகள் சாப்பிடுவதால் அவைகள் பாதிக்கப்படுகின்றன. பன்றி, கோழிகள் உள்பட குப்பையில் மேய்வதால் அவைகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே நெடுஞ்சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காக்களூர் தொழிற்பேட்டை பகுதியில் சாலையோரம் குப்பை குவியல்: துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article