சிவகங்கை, ஜன.12: சிவகங்கையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற இருந்த கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள், நிர்வாக காரணங்களினால் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி,கல்லூரி மாணாவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் மாவட்ட, மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
2024-2025ம் ஆண்டிற்கு சிவகங்கை மாவட்ட அளவில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற 21.1.2025 அன்றும், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 22.1.2025 அன்றும் நடைபெற இருந்த கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நிர்வாக காரணங்களினால் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற 23.1.2025 அன்றும், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 24.1.2025அன்றும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் சிவகங்கை, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 04575-241487 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கவிதை,கட்டுரை,பேச்சு போட்டி தேதி மாற்றம் appeared first on Dinakaran.