கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.2.15 லட்சம் மோசடி: பெண் கைது

3 months ago 19

சென்னை: கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.2.15 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், விஜயபுரம் மண்டலம், மல்லாரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்டய்யா. இவரது மனைவி லதா (48). இவர் கனகம்மாசத்திரத்தில் ரேகா என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடையில் கடந்த மாதம் 22ம் தேதி, 29 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து ரூ.1.25 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு, அதே கடையில் மீண்டும் 20 கிராம் நகையை அடகு வைத்து, ரூ.90 ஆயிரம் பெற்று சென்றுள்ளார்.

லதாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அடகு கடை உரிமையாளர், லலிதா அடகு வைத்த நகைகளை எடுத்து சோதனை செய்தபோது, அனைத்தும் போலி நகை என தெரிய வந்தது.
இதுகுறித்து, கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், 49 கிராம் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.15 லட்சம் மோசடி செய்த லலிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், லதாவை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.2.15 லட்சம் மோசடி: பெண் கைது appeared first on Dinakaran.

Read Entire Article