கவரப்பேட்டை ரெயில் விபத்தில் காயமடைந்த அனைவரும் உடல் நலம் பெற விழைகிறேன் - அன்புமணி ராமதாஸ்

4 months ago 25

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

கவரப்பேட்டை தொடர்வண்டி விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் முழு உடல் நலம் பெற விழைகிறேன்

திருவள்ளூரை அடுத்த கவரப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்குத் தொடர்வண்டி மீது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா சென்று கொண்டிருந்த மைசூர் - தர்பங்கா பாக்மதி விரைவுத் தொடர்வண்டி மோதி 7 பெட்டிகள் தடம் புரண்ட செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வரும் 19 பேரும் விரைவில் முழு நலம் பெற்று இல்லம் திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவரப்பேட்டை தொடர்வண்டி விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் முழு உடல் நலம் பெற விழைகிறேன் திருவள்ளூரை அடுத்த கவரப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்குத் தொடர்வண்டி மீது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிகார் மாநிலம் தர்பங்கா சென்று கொண்டிருந்த மைசூர் - தர்பங்கா பாக்மதி…

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) October 12, 2024
Read Entire Article