
அகமதாபாத்,
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக அமையவில்லை. 13 ஆட்டங்களில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 3 வெற்றி, 10 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இதில் சென்னை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தொலைக்காட்சி வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார். அப்போது, நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான ஆட்டம் குறித்து சக வர்ணனையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரெய்னா, கழுகுகள் 4 நாட்கள் பறக்கவில்லை என்பதற்காக வானம் புறக்களுக்கு சொந்தமாகிவிட முடியாது' என்று அதிரடியாக கூறினார்.