புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

4 hours ago 3

புதுச்சேரி,

புதுச்சேரி முதல் மந்திரி அலுவலகம், வீடு, ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு அண்மையில் இ மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற சோதனையில் அவை அனைத்தும் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், கவர்னர் மாளிகைக்கு இன்று இ மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீசார் உடனடியாக சோதனை நடத்தினர். மோப்ப நாய் உதவியுடன் கவர்னர் மாளிகை வளாகத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. விசாரணை முடிவில் அது வெறும் மிரட்டல் என்பது தெரிய வந்தது. இருப்பினும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கவர்னர் மாளிகைக்கு 6வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Read Entire Article