செங்கல்பட்டு: மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இயந்திர செயல்பாடுகள் குறித்து ஆணையர் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தை அகற்றும் விதமாக அதிநவீன இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த செயல்முறையை நேற்று முன்தினம் மறைமலைநகர் நகராட்சி ஆணையர் ரமேஷ் ஆய்வு செய்தார்.
சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தை நீக்கி சுத்தமான காற்றாக வெளியிடும் வகையில் மறைமலைநகரில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ‘ப்யூரா’ என்ற அதிநவீன இயந்திரத்தை பொருத்தினால் முற்றிலும் துர்நாற்றம் குறைந்து சுத்தமான காற்று வெளிப்படும் செயல்பாடுகள் குறித்து மறைமலைநகர் நகராட்சி ஆணையர் ரமேஷ் முன்னிலையில் தனியார் நிறுவன அதிககாரிகள் செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.
இந்நிகழ்வில் மறைமலைநகர் நகராட்சி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் கௌரி, வருவாய் ஆய்வாளர் சிவமுருகன் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். பியூரா இயந்திரம், சென்னை ஐஐடியால் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. சுமார் 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பியூரா இயந்திரத்தை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொறுத்தினால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
The post கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இயந்திர செயல்பாடுகள் குறித்து ஆணையர் செயல்முறை ஆய்வு appeared first on Dinakaran.