மதுரை, ஜன. 8: கள்ளந்திரியில் இருந்து சிட்டம்பட்டி செல்லும் சாலை மீண்டும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். மதுரை கள்ளந்திரியில் இருந்து சிட்டம்பட்டிக்கு செல்லும் சாலையில் நாள்தோறும் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை சென்று வருகின்றன. இதில் கள்ளந்திரியில் ஊருக்குள் திரும்பும் வழியில் சாலை சேதமடைந்து பெரிய பள்ளம் காணப்படுகிறது.
இதனால் கனமழை மற்றும் பனி காலங்களில் இந்த வழியாக ஊருக்குள் வரும் வாகனங்கள் பள்ளம் இருப்பதை கவனிக்காமல் வரும் போது திடீரென பிரேக் பிடிப்பதால் தங்களது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வருகிறதாக வாகனஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஏற்கனவே 2 தடவை அந்த இடத்தில் சாலையில் பள்ளம் ஏற்பட்டு சீரமைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதே இடத்தில் சாலை பெயர்ந்து வாகனஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பள்ளத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கள்ளந்திரியில் மீண்டும் சேதமடைந்த சாலை வாகனஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.