கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் இளைஞரை தாக்கப்பட்ட விவகாரத்தில் காவலர் மணிகண்டன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி எஸ்பி நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்;
“கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி உட்கோட்டம், கச்சிராயபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விக்கி செந்தில்குமார் த/பெ மலையன் என்பவர் கடந்த 06.06.2025 அன்று கச்சிராயபாளையம் காவல் நிலையத்திற்கு வந்த போது ஏற்பட்ட நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் 04.07.2025 அன்று வெளியாகியுள்ளது.
இதுசம்மந்தமாக கச்சிராயபாளையம் காவல் நிலைய முதல் நிலை காவலர் மணிகண்டன் என்பவரை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வில் தொடர்புடைய மற்ற காவலர்களின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இளைஞரை தாக்கப்பட்ட விவகாரம்: காவலர் மணிகண்டன் ஆயுதப்படைக்கு மாற்றம் appeared first on Dinakaran.