புதுச்சேரி: கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மீனவரை கைது செய்தனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் பூவரசன்(45). மீனவரான இவருக்கு மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். அடிக்கடி அந்த பெண் வீட்டுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணின் 16 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமி, தனது தாயிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, முத்தியால்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து பூவரசனை தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று பூவரசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
The post கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மீனவர் கைது appeared first on Dinakaran.