கரூர், ஜன. 30: தை அமாவாசையை முன்னிட்டு நெரூர், வாங்கல், மாயனூர், குளித்தலை போன்ற பகுதிகளில் காவிரி கரையோரம் நேற்று காலை ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வணங்கினர். மேலும் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆண்டுதோறும் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை நாளன்று, கடலோரம், ஆற்றோரம் போன்ற பகுதிகளுக்கு சென்று தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த வகையில், நேற்று தை அமாவாசையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளான நெரூர், தவிட்டுப்பாளையம், வாங்கல், மாயனு£ர், திருமுக்கூடலூர், குளித்தலை போன்ற காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கானோர் சென்று முன்னோர்களுக்கு திதி கொடுத்துச் வணங்கிச் சென்றனர்.
இதன் காரணமாக, கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மற்றும் அமராவதி ஆற்றங்கரையோர பகுதிகளில் நேற்று அதிகளவு பொதுமக்கள் வந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. \தை அமாவாசையை முன்னிட்டு, நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நேற்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு, கரூர் ஈஸ்வரன் கோயில், மாரியம்மன் கோயில், வெங்கட்ரமண சுவாமி கோயில், வெண்ணைய்மலை முருகன் கோயில், தாந்தோணிமலை முத்துமாரியம்மன் கோயில் போன்ற பல்வேறு கோயில்களில் நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில், அந்தந்த பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
The post களைகட்டியது காவிரி கரை தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்: கோயில்களில் சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.