களத்தில் இறங்கி பீல்டிங் செய்த பயிற்சியாளர் டுமினி- வைரலாகும் வீடியோ

1 month ago 8

அபுதாபி,

தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடைபெற்றது. ஏற்கனவே முடிவடைந்த முதல் இரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 284 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் லிசாட் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. அயர்லாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா 46.1 ஓவரில் 215 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

இதனால் அயர்லாந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போட்டியின் போது தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஜே.பி. டுமினி களத்தில் இறங்கி பீல்டிங் செய்த சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏனெனில் நேற்று போட்டி நடைபெற்ற சூழலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பெரும்பாலான வீரர்கள் சோர்வடைந்து பெவிலியன் திரும்பினர். இதன் காரணமாக பயிற்சியாளரான டுமினி களத்தில் இறங்கி பீல்டிங் செய்ததுடன், பவுண்டரியையும் தடுத்து அசத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Coach JP Duminy fielding for South Africa pic.twitter.com/DTppCnT2Cz

— cricket station (@ShayanR84472894) October 7, 2024


Read Entire Article