களக்காடு, டிச.10: களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் திருவனந்தல் விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து திருவனந்தல் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று காலை பூம்பல்லக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் இடம்பெற்றது. அதன்பின் சுவாமி, அம்பாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி கோயில் பிரகாரங்களில் வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சிவகாமிசுந்தரி பொன்னுசுவாமி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
The post களக்காடு கோயிலில் பூம்பல்லக்கு விழா appeared first on Dinakaran.