விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ரோபோடிக்ஸ்(robotics) வகுப்பில் தொழில்நுட்பம் பயின்று வரும் மாணவர்கள் பல்வேறு ரோபோட்டுகளை உருவாக்கி வருகின்றனர். அதில் சிறந்த ரோபோவாகத் தேர்ந்தெடுக்கும் வகையில் நடனமாடும், ரோபோ விபத்து நேராமல் தடுக்க Precaution ரோபோ போன்ற அதிநுட்பம் வாய்ந்த ரோபோக்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளன. மேலும் கல்வியைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கற்கும்பொழுது கல்வி சுமையாக இல்லாமல் உற்சாகமூட்டும் சுவையாக மாறுகிறது. புத்தகத்தில் படிக்கின்ற அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாட வகுப்புகளைச் செய்து பார்ப்பதுண்டு. இதற்கும் மேலாகக் கற்கவும் பயன்படுவது(simulation) உருவகப்படுத்தும் தொழில்நுட்பம்.
உதாரணமாக www.phet.Colorado.edu எனும் வலைத்தளம் பயன்படுத்துவதன் மூலம் பல அறிவியல் கோட்பாடுகளை திரையில் செய்து பார்த்து புரிந்து கொள்ள முடியும். இதுபோன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் மாணவர்கள் கவனத்தை ஒருங்கிணைக்கவும், கற்றலை மேலும் சிறப்பாக்கவும் முடிகிறது. கற்றலில் இது வெறும் துளிதான். ‘‘கல்வி என்பது கரையில்லாக் கடல்’’ என வள்ளுவர் குறிப்பிடுகிறார். கல்வி கற்பதன் மூலம் மனிதன் மேன்மை அடைகிறான். கற்றலின் சுவையை உணர திறந்த மனமும் ஆர்வமும் மட்டுமே உந்து சக்தியாக அமையும். கல்வி கற்கத் தடை நம் மனம் மட்டுமே. தடையை உடைக்க எங்கள் தொடர் கல்விசார் நிகழ்ச்சியில் பங்குபெறுங்கள். அதற்குச் சுலபமான வழி எங்கள் vivekananda_redhills எனும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பக்கங்கள் மற்றும் 9514707090 எனும் வாட்ஸ் அப்பில் இணைவதன் மூலம் எங்கள் கல்விச் செயல்பாடுகள் உங்களை வந்தடையும். தினகரன் போன்ற கல்வி சார்ந்த இதழில் வெளியாகும் தகவல்களைப் படித்து சிறந்த மாணவர்களாகத் திகழ்ந்து சிந்தனைகள் வளமாக வாழ்த்துகள்!.
The post கல்வி கற்க உதவும் தொழில்நுட்பம் appeared first on Dinakaran.