கல்வராயன்மலை, ஜன. 12: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கடந்த சில தினங்களாக பருவநிலை மாற்றத்தின் காரணமாக மழை பொழிந்து வந்த நிலையில், நேற்று அதிகாலையில் பனிப்பொழிவால் மலையை சுற்றியுள்ள கிராமங்கள் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் வெள்ளி மலை, மணியார்பாளையம், மேல்பாச்சேரி, கிளாக்காடு, சின்ன திருப்பதி, சேராப்பட்டு உள்ளிட்ட 177 சிறிய மற்றும் பெரிய கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் இக்கிராமங்களில் காலை நேரங்களில் மூடுபனி சூழ்ந்து இருண்டு காணப்படுவது மட்டுமல்லாமல் ஒரு சில கிராமங்களில் பகலிலும், பனிப்பொழிவுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
The post கல்வராயன்மலையில் மூடுபனியால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.