கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடந்த ஊர்க்காவல்படை வீரர் கைது

1 month ago 5

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எம்.எஸ்.ராமையா நகரில் கல்லூரி மாணவி ஒருவர் தனது தோழிகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 25-ந் தேதி மாணவியின் வீட்டுக்கு நண்பர் ஒருவா் சென்றிருந்தார். அவருடன் மாணவி பேசி கொண்டிருந்தார்.

அப்போது அவர்களது வீட்டுக்குள் நுழைந்த ஒருவர் மாணவியிடம் ஆபாசமாக சைகை காட்டியுள்ளார். மேலும் மாணவி மற்றும் நண்பரை மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றார். இதுகுறித்து அந்த மாணவியின் தோழிகள் கொடுத்த புகாரின் பேரில் சதாசிவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்மநபரை தேடி வந்தனர். இந்தநிலையில் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி ஊர்க்காவல்படை வீரரான சுரேஷ் குமார் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Entire Article