
சென்னை,
'கல்கி 2898 ஏடி' வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் நாக் அஸ்வின் ஒரு பெண்ணை மையமாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை, வைஜெயந்தி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், அடுத்த ஆண்டு பாதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் நடிக்க உள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க அலியா பட் உடன் படத் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்றாலும், அலியா நடிக்கும் பட்சத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பிறகு ஆலியா நடிக்கும் பான் இந்திய படமாக இது அமையும்.
ஆலியா பட் தற்போது ஒய்ஆர்எப் ஸ்பை யுனிவர்ஸின் அடுத்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'ஆல்பா' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆலியா பட்டுடன் இணைந்து ஷர்வரி வாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'தி ரெயில்வே மென்' என்ற தொடர் மூலம் அறியப்பட்ட இயக்குனர் ஷிவ் ரவைல் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ளது.