கலைஞர் பன்னாட்டு அரங்கம் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய அனுமதிக்கு விண்ணப்பம்

3 weeks ago 5

சென்னை: இசிஆர் சாலையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய அனுமதி கோரி பொதுப்பணித்துறை விண்ணப்பித்துள்ளது. முட்டுக்காட்டு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்பட உள்ளது. இந்த பன்னாட்டு அரங்கத்தில் திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், சுமார் 10,000 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

வெளிப்புற பணிகளான சாலை வசதி, சுற்றுச்சுவர் வசதி, நுழைவு வாயில் உள்ளிட்டவற்றுக்கான பணிகள் ரூ.105 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் 2025ம் ஆண்டு இறுதி அல்லது 2026ம் ஆண்டு தொடக்கத்திற்குள்ளாக இந்த கட்டுமான பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு டெண்டர் கோரியது.  இந்நிலையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய அனுமதி கோரி பொதுப்பணித்துறை விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைக்கப்பட்ட உடன் கட்டுமான பணிகளுக்கு தேவையான முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கலைஞர் பன்னாட்டு அரங்கம் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய அனுமதிக்கு விண்ணப்பம் appeared first on Dinakaran.

Read Entire Article