கலைஞரின் செயலாளர் ஏ.எம்.ராமன் மறைவு

2 months ago 10

சென்னை: கலைஞரின் செயலாளர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஏ.எம்.ராமன் (78) ேநற்று காலமானார். கலைஞரின் செயலாளராக 1996 முதல் 1999 வரை பதவி வகித்தவர் ஏ.எம்.ராமன் ஐ.ஏ.எஸ். அதற்குமுன் 1983 முதல் 1986 வரை தமிழ்நாடு ஆளுநரின் செயலாளராகவும், தொழில்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, கல்வித்துறை முதலான பல்வேறு துறைகளிலும் பணியாற்றியவர். 1989ம் ஆண்டில் கலைஞரின் செயலாளர்களில் ஒருவராகவும், பின்னர் கோவை மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டவர். சில மாதங்களாக உடல் நலிவுற்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று இரவு 8.15 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல், சென்னை இந்திரா நகர் முதல் பிரதான சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை முதல் பகல் 1 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது. அதன் பின்னர் அறந்தாங்கி அருகில் இருக்கும் அவரது சொந்த ஊரான அமரடக்கி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவருக்கு பானுராமன் என்ற மனைவியும், டாக்டர் எம்.ஆர்.பாரி, டாக்டர் எம்.ஆர்.அருண் என இரண்டு மகன்களும் உள்ளனர்.

The post கலைஞரின் செயலாளர் ஏ.எம்.ராமன் மறைவு appeared first on Dinakaran.

Read Entire Article