கலெக்டர் வழங்கினார் பிதர்காடு பகுதியில் குழந்தைகளை தாக்கும் மஞ்சள்காமாலை நோய்

3 months ago 22

 

பந்தலூர், அக்.9: பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் குழந்தைகளுக்கு மஞ்சள்காமாலை நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே பிதர்காடு பதினெட்டு குன்னு மற்றும் மானிவயல் பகுதியில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஒரு சில குழந்தைகளுக்கு மஞ்சள்காமாலை நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நோய் தாக்கம் குறித்து அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் உரிய ஆய்வு மேற்கொண்டு நோய் தாக்கம் உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு உரிய ஆலோசனைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கவும், நோய் கண்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post கலெக்டர் வழங்கினார் பிதர்காடு பகுதியில் குழந்தைகளை தாக்கும் மஞ்சள்காமாலை நோய் appeared first on Dinakaran.

Read Entire Article