கலெக்டர் அலுவலகத்தில் துரு பிடித்து வீணாகும் அரசு வாகனங்கள்

14 hours ago 2

*ஏலம் விட கோரிக்கை

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கார் ஸ்டாண்டில் 10க்கும் மேற்பட்ட ஜீப் மற்றும் கார்கள் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடும் வெயில், மழையில் நனைந்தபடி உள்ள வாகனங்கள் துரு பிடித்து காணப்படுகிறது.

ஓட்டாமல் நிறுத்தி வைத்திருப்பதால், பாம்பு, விஷபூச்சிகள் தங்கும் இடமாக மாறியுள்ளது. எனவே ஜீப் மற்றும் கார்களை ஏலம் விட்டு, அரசு கணக்கில் நிதியை வரவு வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கார் ஸ்டாண்டில் 10க்கும் மேற்பட்ட ஜீப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் பல மாதங்களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், துருபிடித்த நிலையில் உள்ளன. எனவே, பயன்படுத்தாத இந்த வாகனங்களை முறையாக ஏலம் விட்டு, அரசு கணக்கில் சேர்க்க  வேண்டும்,’ என்றனர்.

The post கலெக்டர் அலுவலகத்தில் துரு பிடித்து வீணாகும் அரசு வாகனங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article