தஞ்சாவூர், மே 8: தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு தேன்கூடு நண்பர்கள் சார்பாக அன்னதானம் நடைபெற்றது.தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தஞ்சை மேலவீதியில் சந்து மாரியம்மன் கோவில், கொங்கணேஸ்வரர் கோவில், மூலை ஆஞ்சநேயர் கோவில், வடக்கு வீதியில் பிள்ளையார் கோவில், உள்பட 14 இடங்களில் தேர் நின்று சென்றது. இதையடுத்து தஞ்சை தேன்கூடு நண்பர்கள் சார்பில் இரண்டாவது ஆண்டாக அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை பக்தர்கள் மகிழ்ச்சியோடு வாங்கி சென்றனர்.
The post தொழிலாளர் துறை எச்சரிக்கை பெரியகோயில் தேரோட்டத்தை முன்னிட்டு தேன்கூடு நண்பர்கள் சார்பில் அன்னதானம் appeared first on Dinakaran.