கும்பகோணம், மே.8: தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் நகர செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 11மணி முதல் மதியம் 1மணி வரை தஞ்சாவூர் மேற்பார்வை பொறியாளர்(பொறுப்பு) விமலா தலைமையில் நடைபெறுகிறது.இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கும்பகோணம் மாநகரம், புறநகர், பாபநாசம் நகரம், புறநகர், கபிஸ்தலம், அய்யம்பேட்டை புறநகர், திருக்கருகாவூர், கணபதி அக்ரஹாரம், பட்டீஸ்வரம், சுவாமிமலை, திருப்புறம்பியம் பிரிவு அலுவலக பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களது மின் விநியோகம் தொடர்பான குறைகளை நேரில் வந்து தெரிவித்து பயனடையலாம். இந்த தகவல் தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் நகர செயற்பொறியாளர் திருவேங்கடம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
The post கும்பகோணம் நகர் பகுதியில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் appeared first on Dinakaran.