கலுங்குவிளை, கோமானேரி, கொம்பன்குளம் பகுதியில் தொடர் மின் தடையால் பொதுமக்கள் அவதி

1 month ago 6

சாத்தான்குளம், நவ. 21: சாத்தான்குளம் ஒன்றியம் கலுங்குவிளை, கொம்பன்குளம், கோமானேரி பகுதியில் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் மின் தடை ஏற்பட்டால் மறுநாள் காலையில் தான் மின்சாரம் திரும்ப வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். சில நேரம் காலை மின்சாரம் துண்டிக்கப்படுவதும், மீண்டும் மாலையில் தான் விநியோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பள்ளி மாணவ- மாணவிகள் வீட்டுப் பாடம் படிக்க முடியாமலும், கிராம மக்கள் செல்போன் சார்ஜ் போட முடியாமலும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் வீட்டில் பெண்களும் அத்தியாவசிய செயல்களை செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

சாத்தான்குளம் மின்வாரிய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் என வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே அதிகாரிகள் இதனை கவனித்து இப்பகுதிகளில் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கலுங்குவிளை போனிபாஸ் கூறுகையில், இப்பகுதியில் ஏற்படும் மின்தடை குறித்து உயர் அதிகாரிகள் வரை புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதொடரும் பட்சத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும், என்றார்.

The post கலுங்குவிளை, கோமானேரி, கொம்பன்குளம் பகுதியில் தொடர் மின் தடையால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article