கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் ஆய்வு..!!

2 months ago 24

ஆந்திரா: கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக ஆந்திர மாநில அரசு திருமலையில் திருப்பாதி சிறப்பு விசாரணை குழு அமைத்தனர். இந்த விசாரணை குழுவானது கடந்த 3 நாட்களாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

முதல் நாள் அந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட கிழக்கு காவல் நிலையத்தில் முதல் கட்ட தகவல் மற்றும் புகார் அளித்த கொள்முதல் பிரிவு பொதுமேலாளர் முரளி கிருஷ்ணா அளித்த புகாரில் என்னென்ன குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற விவரங்களை போலீசாரிடம் இருந்து கேட்டு தெரிந்து கொண்டனர். நேற்று செயல் அதிகாரி சியாமளா ராஜிடம் டெண்டர் எவ்வாறு வழங்கப்பட்டது என்ற விவரங்களை கேட்டறிந்து கொண்டனர். மேலும் கலப்படம் விவகாரம் எவ்வாறு உங்களுக்கு தெரியவந்தது.

வழக்கமாக மைசூரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பக்கூடிய நிலையில் இந்த முறை முதல் முறையாக எதற்காக குஜராத்துக்கு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். இன்று மூன்றாவது நாளாக திருப்பதியில் உள்ள கொள்முதல் பிரிவு அலுவலக கிளையில் திருமலையில் உள்ள நெய் கிடங்கு உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏ.ஆர்.டைரி நிறுவனத்திற்கும் ஒரு குழு செல்வதற்காக தயாராகி வருவதாகவும், அந்த குழு அங்குள்ள ஆய்வகங்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது. நெய்யை அங்கிருந்து எப்போது அனுப்பினார்கள் என்ற விவரங்களை சேகரிப்பதற்காக பணிகளிலும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Read Entire Article