நன்றி குங்குமம் தோழி
*கறிவேப்பிலை நம் உடலுக்கு பல நன்மைகளை அள்ளித் தருகிறது.
*கறிவேப்பிலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. சருமத்தை பளபளப்பாக்கும் திறன் உள்ளது.
*கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் தினமும் 5 அல்லது 7 இலையை வெறும் வயிற்றில் சுமார் 2 வாரங்கள் சாப்பிட்டால் ேபாதும் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
*செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் செரிமானம் அதிகரிக்கும்.
*வைட்டமின்கள், தாதுக்கள் அதிகமுள்ளதால் தினமும் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுவதோடு பல நோய்கள் வராமல் தடுக்கும். உடல் எடை குறையும்.
*ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
*சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவில் ஓர் அங்கமாக தினமும் கறிவேப்பிலை பொடி, தொக்கு என சேர்த்துக் கொள்ளலாம்.
*கறிவேப்பிலை உடலில் உள்ள நச்சுகளையும் விரட்டும்.
*தினமும் சாப்பிட்டால் முடி உதிர்வு குறையும். சீக்கிரம் நரை முடி வராது. முடி வளரும்.
*வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
பல நன்மைகளை அள்ளித் தருவதால் ஏதேனும் ஒரு வகையில் கறிவேப்பிலையை தூக்கிப் போடாமல் சாப்பிட வேண்டும்.
தொகுப்பு: மாலதி நாராயணன், சென்னை.
The post கறிவேப்பிலையின் நன்மைகள்! appeared first on Dinakaran.