கறம்பக்குடி, ஜன.26: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற பேரணியை தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் முருகேசன் தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இந்த பேரணியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி பதாகை களை ஏந்தி சீனிக்கடை முக்கம்,அம்புக்கோவில் முக்கம்,உள்கடை வீதி மீன்மார்க்கெட் மருத்துவ மனை சாலை காவல் நிலையம் வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது.
கோஷங்களை எழுப்பி நெகிழியை தவிர்ப்போம் நெகிழியை தவிர்ப்போம் என மாணவிகள் கோஷங்கள் எழுப்பினர். ஒருமுறை பயன் படுத்தபடும் பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பாக உறுதி மொழி எடுத்து கொண்டனர். மேலும் பேரூராட்சி யில் பணி புரியும் பணியாளர்கள், தன்னார்வலர்கள் பேரூராட்சி வார்டுகளில்பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்தனர். பேரணியில் பெண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிமேகலை மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பேரூராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள்,அலுவலர்கள் தன்னார்வலர்கள் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
The post கறம்பக்குடி பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.