கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பாலிவுட் நடிகை கியாரா அத்வானி

4 hours ago 1

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'புக்லி' என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, எம்.எஸ். தோனி, பரத் எனும் நான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'செர்ஷா' படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் நடித்திருந்தார்.

அப்போது, நடிகை கியாரா அத்வானிக்கும் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு காதல் ஏற்பட, இருவரும் 2023ம் ஆண்டு ஜெய்சால்மரில் திருமணம் செய்து கொண்டனர். சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தங்களது முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கிறார்கள். நடிகை கியாரா அத்வானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளார். குழந்தைகளின் காலணிகளை பதிவிட்டு கியாரா, " எங்களது வாழ்க்கையின் சிறந்த பரிசு. விரைவில் வரவிருக்கிறது" எனக் கூறியுள்ளார். .இதற்கு சமந்தா, "ஓ மை காட். வாழ்த்துகள்" என கமெண்ட் செய்துள்ளார். பல நடிகர், நடிகைகள் கியாரா, சித்தார்த் தம்பதிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article