கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

3 months ago 22

அயோத்தியாப்பட்டணம், அக்.5: வாழப்பாடி அடுத்த ஆலடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பாயி(35). இவர் கடந்த 2015ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் குற்றவாளியான புழுதிக்குட்டை பகுதியை சேர்ந்த மாதேஷ்(43) என்பவர், கடந்த 2023 முதல் சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால், நீதிபதி பிடி ஆணை பிறப்பித்தார். அவர் கர்நாடகா பகுதியில் தலைமறைவாக இருப்பதாக, அம்மாபேட்டை சரக போலீஸ் உதவி கமிஷனருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று தனிப்படை போலீசார் கர்நாடகாவில் உள்ள திப்பூர் பகுதியில் மாதேஷை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Read Entire Article