கர்நாடகாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

5 months ago 39

பெங்களூர்:

கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று மாலை மைசூருவில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக குளிர்ந்த காற்று வீசியது.

மேலும் இன்று முதல் 4 நாட்களுக்கு மைசூரு, குடகு, சாம்ராஜ்நகர், மாண்டியா, ஹாசன், தும்கூர், பெங்களூரு மாநகரம், பெங்களூரு புறநகர், ராம்நகர், சிக்கபள்ளாபூர், கோலார் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தாவணகெரே, சித்ரதுர்கா, குடகு, மைசூரு, சாம்ராஜ்நகர் உள்பட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read Entire Article