
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் ஆறு மாதங்களுக்கு முன்னர் பம்ப்வெல்லில் போதைப்பொருள் கடத்திய ஹைதர் அலி என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 15 கிராம் எம்.டி,என்.ஏ. வை போலீசார் பறிமுதல் செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதில் நைஜீரிய நாட்டை சேர்ந்த பீட்டர் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ. 6 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லிக்கும் பெங்களூருக்கும் இடையே விமானம் வழியாக கடத்தல் நடைபெறுவது தெரிய வந்தது. மேலும் பெங்களூருவின் எலக்ட்ரானிக் சிட்டியி உள்ள நீலாத்ரி நகரில் சந்தேகத்திற்கிடமான பேன்ட் (31) மற்றும் அபிகேல் அடோனிஸ் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் நடத்திய சோதனையில் ரூ. 75 கோடி மதிப்புள்ள 37 கிலோவுக்கும் அதிகமாக போதைப்பொடுட்கள் கண்டுபிடிக்கப்பட்டது
அவர்கள் விற்பனையாளர்களுக்கு போதைப்பொடுட்கள் சப்ளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் போலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதற்கு தொடர்புடைய மற்ற நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.