கர்நாடகா: உள்ளூர் கிரிக்கெட்டின்போது 'பாகிஸ்தான் வாழ்க' கோஷம் எழுப்பிய நபர் அடித்துக்கொலை

5 hours ago 4

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் குடுபு கிராமத்தில் நேற்று முன் தினம் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், ஆட்டத்தின்போது மதியம் 3 மணியளவில் ஒரு நபர் 'பாகிஸ்தான் வாழ்க' என கோஷம் எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்தவர்கள் அந்த நபர் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். கற்கள், கட்டைகளை கொண்டு அந்த நபரை சரமாரியாக அடித்தனர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சின் என்ற நபர் உள்பட 15 பேரை கைது செய்தனர். மேலும், 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பல் தாக்கியதில் உயிரிழந்த நபரின் பெயர், வயது, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை. உயிரிழந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article