உருகி போன பல்பு; காங்கிரசை சாடிய சத்தீஷ்கார் முதல்-மந்திரி

4 hours ago 2

ஜெய்ப்பூர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இது தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் ஒன்றை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து நடத்தின.

இதில் பிரதமர் மோடி பங்கேற்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் காணாமல் போய் விட்டார் என எக்ஸ் தளத்தில், காங்கிரஸ் தெரிவித்து இருந்தது. இதற்கு பதிலடி தரும் வகையில் சத்தீஷ்கார் முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் செய்தியாளர்களிடம் பேசும்போது, காங்கிரஸ் கட்சி உருகி போன ஒரு பல்பு. நாட்டு மக்களின் நம்பிக்கையை அவர்கள் இழந்துவிட்டனர்.

அதனால், அர்த்தமற்ற விசயங்களை அவர்கள் கூறி வருகின்றனர் என்றார். காங்கிரஸ் நடத்திய அரசியல் சாசன பாதுகாப்பு பேரணியை பற்றி குறிப்பிட்ட அவர், பல முறை அவர்களே அரசியலமைப்பை அச்சுறுத்தலின் கீழ் வைத்திருந்தனர்.

நெருக்கடி நிலை காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அல்லாதோர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜனநாயக படுகொலை நடந்தது. சுயநல நோக்கங்களுக்காக அவர்கள் பல்வேறு முறை அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டனர். அதனால், இந்த பேரணி அவர்களுக்கு பயன் தராது என்றார்.

பிரதமர் மோடி நேற்று (செவ்வாய் கிழமை) மாலை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகள் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த உயர்மட்ட கூட்டத்தில் பல முக்கிய விசயங்கள் ஆலோசிக்கப்பட்டன. முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு உள்ளது என கூட்டத்தில் அவர் கூறினார்.

Read Entire Article