கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பது பற்றி பாஜக எம்.எல்.ஏ தெரிவித்த கருத்து தொடர்பாக விசாரிக்கப்படும்: டி.கே சிவகுமார்

3 months ago 25


பெங்களூர்: கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பது பற்றி பாஜக எம்.எல்.ஏ தெரிவித்த கருத்து தொடர்பாக விசாரிக்கப்படும் என அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ சனகௌடா பாடேல் அண்மையில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏறடுத்தியது. அதில், காங்கிரஸ் அரசை கவிழ்த்து தான் முதலமைச்சர் ஆவதற்கு 1000 கோடி ரூபாய் வரை பேசப்பட்டதாகவும் பேரம் பேசிய தலைவரின் பெயரை வெளியிட மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக மேலிட தலைவர்கள் எம்.எல்.ஏ க்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் காங்கிரஸ் அரசு தானாகவே கவிழும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ தெரிவித்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் கூட்டத்திற்கு அழைப்பு விடுதிருப்பதாகவும் சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பான விவகாரத்தில் வருமான வரித்துறையும், காவல்துறையும் விசாரணை நடத்த வேண்டும் என துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் கேட்டு கொண்டுள்ளார்.

The post கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பது பற்றி பாஜக எம்.எல்.ஏ தெரிவித்த கருத்து தொடர்பாக விசாரிக்கப்படும்: டி.கே சிவகுமார் appeared first on Dinakaran.

Read Entire Article