கர்நாடக அரசின் இலவச திட்டங்களை விமர்சித்த மகாராஷ்டிரா அரசு மீது வழக்கு: முதல்வர் சித்தராமையா அதிரடி

2 months ago 10

பெங்களூரு: கர்நாடக மாநில அரசு செயல்படுத்தி வரும் ஐந்து உத்தரவாத திட்டங்களை விமர்சனம் செய்து விளம்பரம் வெளியிட்டுள்ள மகாராஷ்டிரா மாநில அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். பெங்களூரு விதானசவுதாவில் கனகதாசர் ஜெயந்தி முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கியபின் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறும்போது, ‘மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பரப்புரை செய்யவந்த பிரதமர் மோடி, கர்நாடக அரசு செயல்படுத்தி வரும் ஐந்து உத்தரவாத திட்டங்களை விமர்சித்து பெரிய பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு சென்றுள்ளார்.

பிரதமர் பேசியதை அப்படியே ஆமோதிக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநில பாஜ கூட்டணி அரசு விளம்பரம் மூலம் கர்நாடகாவின் பொய் உத்தரவாத திட்டங்கள் என தெரிவித்துள்ளது. கர்நாடக அரசுக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு செய்துள்ள விளம்பரத்தை எதிர்த்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு தொடருவது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.

 

The post கர்நாடக அரசின் இலவச திட்டங்களை விமர்சித்த மகாராஷ்டிரா அரசு மீது வழக்கு: முதல்வர் சித்தராமையா அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article