கரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க: ஓபிஎஸ் வலியுறுத்தல்

1 month ago 5

சென்னை: கரோனாவால் உயிரிழந்த முன்​களப் பணியாளர்​களின் வாரிசுகளுக்கு அரசு வேலை மற்றும் இழப்​பீடு வழங்க வேண்​டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம் வலியுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்பாக அவர் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திமுக​வின் தேர்தல் அறிக்கை​யில் “பணி​யில் இருந்த​போது கரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்​துவர்​கள், மருத்​துவம் சார்ந்த பணியாளர்​கள், நகராட்சி மற்றும் அரசு அலுவலர்​கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்​களின் குடும்பத்​தா​ருக்கு உரிய இழப்​பீடு வழங்​கப்​படும்” என்று குறிப்​பிட்​டுள்​ளனர். ஆனால், திமுக அரசு பொறுப்​பேற்று மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலை​யில், அதை செயல்​படுத்​தவில்லை.

Read Entire Article