சென்னை: கனடாவில் பிரதமர் மார்க் கேர்னி தலைமையிலான புதிய அமைச்சரவையில் நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கேரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அவர் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனடாவில் பிரதமர் மார்க் கேர்னி தலைமையிலான புதிய அமைச்சரவையில் நீதித்துறை அமைச்சராகவும், கனடாவின் தலைமை வழக்கறிஞராகவும் பொறுப்பேற்றுள்ள எனது நண்பரும், ஈழத்தமிழருமான கேரி ஆனந்தசங்கரிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.