கரூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு

1 week ago 2

 

கரூர்: வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் பனி பெய்து மக்களை வாட்டி வதக்கி வருகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை 3 மாதம் வடகிழக்கு பருவமழை காலம். ஆண்டின் சராசரி மழையை எட்ட இந்த 3 மாதத்தில் பெய்யும் மழைதான் அதிகளவு உதவி வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட அளவு கரூர் மாவட்டத்தில் மழை பெய்தது. இந்நிலையில், கடந்தாண்டைவிட இந்தாண்டு வழக்கத்தைவிட அதிகாலை நேரத்தில் அதிகளவு பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்த பனிப்பொழிவு காரணமாக காலை நேரங்களில் வேலைக்கு செல்லும் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும், கரூர் மாவட்டத்தின் புறநகர்ப்பகுதிகளில் சாலையை மறைக்கும் வகையில் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகளும் சாலையை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பனியின் தாக்கம் பிப்ரவரி மாதம் வரை நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த காலக்கட்டங்களில் வரும் புத்தாண்டை, பொங்கல் பண்டிகை போன்றவை தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்து பண்டிகை காலங்கள் என்பதால் பனிப் பொழிவை மகிச்சியுடன் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

The post கரூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு appeared first on Dinakaran.

Read Entire Article