கரூர்.பிப்.22: கரூர் ஜெய்ராம்ஸ் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.கரூர்-மதுரை பைபாஸ் ரோடு ஆட்டையாம்பில் ஜெயராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவ மாணவியரை நேரடியாக வேலைவாய்ப்பில் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.ஃஎவரெடி குரூப் மில்ஸ் சார்பில் அந்நிறுவன அதிகாரிகள் கணேஷ் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் மாணவ மாணவியருக்கு நேரடியாக எழுத்து தேர்வு மற்றும் சுய சிந்தனை தேர்வு நடத்தினார். இதில் தேர்வு பெற்ற தகுதியான மாணவ மாணவியர்களே எழுத்துத்தேர்வு மற்றும் சுயசிந்தனை வெளிப்பாடு ஆகிய தேர்வுகள் வாயிலாக தேர்வு செய்தனர். இதில் தகுதியான வணிக கணினி பயன்பாட்டியல் துறை, கணினி அறிவியல் துறை மற்றும் வேதியியல்துறை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை கல்லூரி தாளாளர் பொறியாளர் ஆர்.ராமசாமி, கல்லூரி முதல்வர் ஸ்டீபன்ராஜா, கல்வி இயக்குநர் லட்சுமணசிங் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
The post கரூர் ஜெயராம்ஸ் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.