கரூர், ஜன.8: கரூர் ஐந்து ரோடு பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூரில் இருந்து வாங்கல், நாமக்கல் மாவட்ட பகுதிகள் மற்றும் அரசு காலனி, சோமூர், நெரூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஐந்து ரோடு பகுதிக்கு வந்து இடதுபுறம் திரும்பி வாங்கல் சாலையில் செல்கின்றன. இதேபோல், கரூரில் இருந்து பசுபதிபாளையம், புலியூர், அரசு மருத்துவக் கல்லூரி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் 5 ரோடு வந்து, எதிரேயுள்ள உயர்மட்ட பாலத்தின் வழியாக சென்று வருகிறது. மேலும், ஐந்து ரோடு பகுதியில் கருர் ஜவஹர் பஜார், மாரியம்மன் கோயில் போன்ற பகுதிகளுக்கான சாலையில் செல்கிறது.
இவ்வாறு மூன்று வழிகளில் ஐந்து ரோடு பகுதியில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால், பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் ஐந்து ரோடை சந்தித்து பிரிந்து செல்லும்போது அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருவதோடு, சில சமயங்களில் சிறு விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. எனவே, தெளிப்படுததும் வகையில் ஐந்து ரோடு பகுதியை பார்வையிட்டு எளிதான வாகன போக்குவரத்து நடைபெற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஐந்து ரோடு பகுதியில் நிலவி வரும் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
The post கரூர் ஐந்து ரோடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.