திருச்சி, மே 16: திருச்சியில் தரையிறங்க வேண்டிய ஏர் இந்தியா விமானம் மோசமான வானிலையால் சென்னையில் தரையிறங்கியதால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகினர். சென்னையிலிருந்து திருச்சிக்கு 56 பயணிகளுடன் நேற்று மாலை புறப்பட்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 7:45 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும். ஆனால் விமானம் ஏற்கனவே தாமதமாக புறப்பட்டு வந்ததாக தெரிகிறது.
நேற்று இரவு 8:15க்கு தரையிறங்க முற்பட்ட பொழுது திருச்சி விமான நிலையத்துக்கு முன்னதாகவே வானிலை மோசமாக இருந்தது. இதனால் விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது. இதையடுத்து ஏர் இந்தியா விமானம் மீண்டும் 56 பயணிகளுடன் சென்னைக்கே மீண்டும் திரும்பியது. இதனால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகினர். வானிலை சரியான உடன் மீண்டும் சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post திருச்சியில் மோசமான வானிலை சென்னையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் appeared first on Dinakaran.