பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி வாரிசுகள், தற்போதைய உரிமைதாரர் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

3 hours ago 2

திருச்சி, மே 16: திருச்சி மாவட்டத்தில் இறந்த நில உரிமைதாரர்களின் பெயர்களை நீக்கி, தற்போதைய வாரிசுதாரர் அல்லது உரிமைதாரர் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகரப்புறங்களிலுள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு, இணைய வழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், http://eservice.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இருப்பினும், பல சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களுள் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.

எனவே, பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது Citizen Portal வாயிலாவோ விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் ஆவணங்களின் அடிப்படையில் வரும் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொிவித்துள்ளார்.

The post பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி வாரிசுகள், தற்போதைய உரிமைதாரர் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article