நெல்லை, பிப்.17: விஜயநாராயணம் போலீசார் கடந்த ஆண்டு டிச.19ம் தேதி அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முனைஞ்சிப்பட்டி அருகே கழுவூர் பகுதியில் உள்ள கருமேனி ஆற்றில் மர்ம நபர்கள் ஆற்று மணலை திருடுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்த கொள்ளையர்கள் மினி லாரியில் ஆற்று மணலுடன் அங்கிருந்து வேகமாக சென்றனர். தொடர்ந்து போலீசார் மணல் கொள்ளையர்களை துரத்திச் சென்றனர்.
சினிமா பணியில் சுமார் 2 கிமீ தூரம் மினி லாரியை விடாமல் துரத்தினர். பதைக்கம் பகுதியில் சாலை வளைவில் மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து முட்புதரில் லாரி மோதி நின்றது. இதையடுத்து மணல் கொள்ளையர்கள் மினி லாரியை சம்பவ இடத்திலேயே விட்டு விட்டு தப்பி ெசன்றனர். போலீசார் 1 யூனிட் மணலுடன் மினி லாரியை கைப்பற்றி கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
மணல் கொள்ளையர்கள் குறித்து விஜயநாராயணம் போலீசார் கடந்த 2 மாதங்களாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் மணல் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தூத்துக்குடியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. எஸ்ஐ உதயலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு சென்று அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் நாங்குநேரி அருகேயுள்ள
மறுகால்குறிச்சியைச் சேர்ந்த நாஞ்சில் சுந்தர் (30) என்பதும், அவர் மீது களக்காடு, முன்னீர்பள்ளம், நாங்குநேரி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு, தாக்குதல், மிரட்டல் என 8 வழக்குகள் நிலுவையில்
இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். முடிவுற்ற திட்ட பணிகளை ெதாடங்கி வைக்கிறார்
The post கருமேனி ஆற்றில் மணல் கடத்தியவர் கைது appeared first on Dinakaran.