கருண் நாயர், துருவ் ஷோரே அபார சதம்.. ராஜஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய விதர்பா

5 hours ago 2

வதோதரா,

32-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மோதி பாக் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ராஜஸ்தான் - விதர்பா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கார்திக் சர்மா 62 ரன்களும், சுபம் கர்ஹ்வால் 59 ரன்களும் அடித்தனர். விதர்பா தரப்பில் அதிகபட்சமாக யாஷ் தாகூர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய விதர்பா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன துருவ் ஷோரே - யாஷ் ரத்தோடு சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இதில் யாஷ் ரத்தோடு 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் கருண் நாயர் அதிரடியாக விளையாடினார். துருவ் ஷோரே நிதான ஆட்டத்தை கடைபிடிக்க கருண் நாயர் அதிரடியில் பட்டையை கிளப்பினார். இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதுடன் சதமடித்தும் அசத்தினர். இதன் மூலம் 43.3 ஓவர்களில் 292 ரன்கள் அடித்த விதர்பா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.. கருண் நாயர் 122 ரன்களுடனும், துருவ் ஷோரே 118 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் குஜராத் அணியை வீழ்த்தி அரியானா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.


Read Entire Article