*முட்டையின் வெள்ளைக் கருவை தனியாக எடுத்து, வாரம் ஒரு முறை தலைமுடியில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து சீயக்காய்த் தூள் தேய்த்துக் குளித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும்.
* மாதம் ஒரு முறை தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இரண்டையும் கலந்து இரவில் மென்மையாக தடவி மசாஜ் செய்துகொள்ளுங்கள். காலையில் சீயக்காய் தேய்த்துக் குளித்தால் கூந்தல் செழிப்பாக வளரும்.
*தலைக்குக் குளித்த பிறகு ஈரம் நன்றாக காய்வதற்கு முன் எண்ணெய் தடவாமல் இருந்தாலே போதும். முடி செம்பட்டையாகாமலும், நரைக்காமலும் இருக்கும்.
* பெரிய நெல்லிக்காயை விதை நீக்கி, நறுக்கி, இடித்து ½ லி. நல்லெண்ணெய், ¼ லி தேங்காய் எண்ணெயோடு கலந்து மிதமான தீயில் காய்ச்சி, வடிகட்டி தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருகருவென வளரும்.
*மருதாணி பவுடர், முட்டையின் வெள்ளைக் கரு, புளிக்காத தயிர் மூன்றையும் சேர்த்து தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால் இளநரை கருப்பாகும்.
* நார்த்தங்காய் சாறு பிழிந்து தலையில் தேய்த்து சில நிமிடம் மட்டும் வைத்திருந்து, சோறு வடித்த கஞ்சியுடன் சீயக்காய் தூள் கலந்து தலையை அலசினால் அழுக்கு நீங்கி, கூந்தல் பளபளக்கும்.
* கைப்பிடி வேப்பங்கொழுந்து, அதே அளவு குப்பை மேனி இலை, ஒரு மஞ்சள் துண்டு சேர்த்து தண்ணீர் தெளித்து மை போல அரைத்து, தலை முடியில் தடவி, நன்கு காய்ந்த பிறகு அலசி குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.
* கூந்தல் எண்ணெய் பசையுடன் படிந்திருக்கிறதா? எலுமிச்சைச் சாறு தடவி ஊறவைத்து, ஷாம்பு போட்டு குளித்தால் கூந்தல் புஸ்… புஸ்… என அழகாகும்.
* தண்ணீரை கொதிக்கவைத்து, அந்த ஆவியில் கூந்தலை பாதுகாப்பாக காட்டினாலும், அல்லது கொதிக்கும் நீரில் சுத்தமான டவலை நனைத்து பிழிந்து, பத்து நிமிடம் தலையில் சுற்றிக் கொண்டு, ஷாம்பு போட்டு அலசி, காய விட்டாலும் போதும். கூந்தல் மென்மையாக பளபளப்பாகும்.
– மல்லிகா அன்பழகன், சென்னை.
The post கரு கரு கூந்தலுக்கு முட்டைக்கரு! appeared first on Dinakaran.