கரட்டுப்பாளையம் பகுதியில் கீழ்பவானி கசிவு நீர் வாய்க்காலில் முட்புதர்களை அகற்ற வலியுறுத்தல்

1 week ago 1

 

ஈரோடு, ஏப். 11: ஈரோடு அடுத்துள்ள கவுண்டிச்சிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கரட்டுப்பாளையம் பகுதியில் கீழ்பவானி கசிவு நீர் வாய்க்கால் நீர்வழித்தடம் உள்ளது. இதில், ஆண்டுக்கு 10 மாதங்கள் வரை நீர்வரத்து இருக்கும். கீழ்பவானி வாய்க்கால் மட்டுமின்றி இதர நீர்வழித்தடங்கள் மூலமாகவும் இந்த வாய்க்காலில் நீர்வரத்து இருந்துகொண்டே இருக்கும். இந்த வாய்க்கால் மூலமாக சுற்றுவட்டாரத்தில் உள்ள 3க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீராதாரம் பெற்று வருகின்றன.

இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக சுத்தப்படுத்தப்படாமல், வாய்க்கால் முழுவதும் தற்போது கோரை புற்கள், இதர நீர்வாழ் தாவரங்களால் சூழப்பட்டு, புதர் மண்டி காணப்படுகிறது. எனவே, இந்த நீர்வழித்தடங்களில் உள்ள களைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கரட்டுப்பாளையம் பகுதியில் கீழ்பவானி கசிவு நீர் வாய்க்காலில் முட்புதர்களை அகற்ற வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article