கயத்தாறில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கிளை துவக்கம்

2 months ago 15

கயத்தாறு,அக்.3:கயத்தாறில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கிளை தொடக்க விழா நடந்தது. கயத்தாறு வட்டார கல்வி அலுவலகத்தின் முன்பு நடந்த விழா விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜான்சன் மெல்கி சதேக் ஸ்டாலின் தலைமை தாங்கினார். வட்டாரச் செயலாளர் பொன்மணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கயத்தாறு பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை முன்னாள் முதல்வர் கலைஞரின் படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் சண்முகநாதன் மன்ற கொடியேற்றினார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் ரவி, மாநில செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில தீர்ப்பாய குழு உறுப்பினர்கள் செந்தில், நவநீதன், எட்வின், நடராஜன், பக்தன், மாநில மகளிரணி துணை அமைப்பாளர் ரோஸ் இந்திரா செலின், தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயசீலன், மாவட்ட பொருளாளர் ஹர்பான்சிங் பிரேம்குமார், தென்காசி மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி, மாவட்ட செயலாளர் கனகராஜ், நெல்லை மாவட்ட தலைவர் ராஜகுமார், மாவட்ட செயலாளர், காந்திராஜா, மாவட்ட துணைச்செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் ஐசக், சுதாகர், பாபு, கென்னடி, நிர்மல், முருகன், ஜெயக்குமார், செல்வம், முருகன், நெல்லை நகர செயலாளர் செல்வமாரிமுத்து, கோவில்பட்டி கல்வி மாவட்ட பொறுப்பாளர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கயத்தாறு வட்டாரத் தலைவர் அந்தோணி அலெக்ஸ் ரவி நன்றி கூறினார்.

The post கயத்தாறில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கிளை துவக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article