கம்பு சாகுபடி செய்ய வேண்டும்

1 day ago 3

 

தர்மபுரி, மார்ச் 24:தர்மபுரி மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் நெல், மக்காச்சோளத்திற்கு அடுத்தபடியாக, கம்பு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கம்புப் பயிருக்கு குறைந்த நீர் போதுமானது.

குறைந்த மண் வளமுள்ள இடங்களில் கூட செழித்து வளரும். இதில் மற்ற தானியத்தைக் காட்டிலும் அதிக சத்துக்கள் அடக்கியுள்ளது. அரிசியை மட்டுமே உண்பதினால் ஏற்படும் சத்துக்குறைபாட்டை போக்க, கம்பு ஒரு சிறந்த சிறுதானியமாகும். சித்திரை மற்றும் மாசி பட்டத்தில் இறவையிலும், மானாவாரியில் ஆடி மற்றும் புரட்டாசி மாதத்திலும் பயிரிடலாம். ரகத்தை பொருத்து கோ.9, கோ.10. எக்ஸ் 7. ஐ.சி.எம்.வி.221 போன்ற வீரிய ஒட்டு ரகங்களை ஏக்கருக்கு 2 கிலோ விதையினை சுமார் 2 செண்ட் நாற்று விட்டு 18 நாட்களுக்குள் பிடுங்கி நடவு செய்திட வேண்டும்.

வரிசைக்கு வரிசை 45 செ.மீ. மற்றும் செடிக்கு செடி 15 செமீ என்ற அளவில் நடவு செய்திட வேண்டும். நடவு வயலுக்கு மண் பரிசோதனை அடிப்படையில் உரங்களை இடலாம். அல்லது பொது பரிந்துரையாக, அடி உரமாக ஏக்கருக்கு தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து முறையே 25:40:20 கிலோ என்ற அளவில் நடவிற்கு முன்னதாகவும், நடவு செய்த 15ம் நாள் தழைச்சத்து 25 கிலோவும், 30ம் நாள் தழைச்சத்து 30 கிலோ மற்றும் சாம்பல் சத்து 20 கிலோ இடவேண்டும். நடவு செய்த 5 நாட்களுக்குள் சிறுதானிய நுண்சத்து 5 கிலோவினை 20 கிலோ மணலுடன் கலந்து இடவேண்டும்.

ஈரத்தை பொறுத்து 2 வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். 85 முதல் 90 நாட்களில் முதிர்ச்சி அடைந்து, அறுவடைக்கு தயாராக இருக்கும். சராசரி மகசூல் ஏக்கருக்கு 1400 கிலோ வரை கிடைக்கும். எனவே இப்பருவத்தில் கம்பு சாகுபடி செய்து பயனடைய வேண்டும். இவ்வாறு
தெரிவித்துள்ளார்.

The post கம்பு சாகுபடி செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article