டெல்லி: டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி வருகிறார். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி உறுதிசெய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார். அதிமுக கொள்கை வேறு, கூட்டணி வேறு என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் தன்னை நம்பியவர்கள் யாரையும் கைவிட்டதில்லை என்று எடப்பாடி பேசியிருந்தார். பாஜகவுடன் கூட்டணி பேச்சுக்கே இடமில்லை என்று கூறி வந்த எடப்பாடி பழனிசாமி நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி டெல்லி புறப்பட்டனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லியில் உள்ள நிலையில் அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். ஒரே நாளில் அடுத்தடுத்து அதிமுக தலைவர்கள் டெல்லி சென்றுள்ளதால் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்ப்பதற்காக வந்துள்ளதாக விமான நிலையத்தில் பழனிசாமி பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி வருகிறார். டெல்லியில் முக்கியமானவர்கள் யாரையும் சந்திக்க வரவில்லை என கூறிய நிலையில் அமித்ஷாவுடன் சந்தித்து பேசினார். கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியுடன் அமித் ஷாவை சந்தித்து பேசினார். முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார்.
The post டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு appeared first on Dinakaran.